×

தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் 4 படங்கள்

தீபாவளி பண்டிகைக்கு ஒவ்வொரு வருடமும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடம் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய டாப் ஹீரோக்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இருந்தாலும் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடிக்கும் ’ஜப்பான்’, கார்த்திக் சுப்புராஜின் ’ஜிகர்தண்டா 2’, விக்ரம் பிரபுவின் ’ரெய்டு’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிடா’ படமும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதில் பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை தமன்னா மலையாளத்தில் முதன் முறையாக நடித்துள்ள ‘பாந்த்ரா’ படமும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் திலீப் ஹீரோவாக நடித்துள்ளார்.

The post தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் 4 படங்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Diwali festival ,Rajini ,Kamal ,Vijay ,Ajit ,Diwali ,Japan ,Karthi ,Anu Emmanuel ,Raju Murugan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்